Editorial / 2018 நவம்பர் 12 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை - வெலிமடை வீதியின் மொரேதொட்ட பகுதியில், மண்சரிவு அபாயம் நீடித்து வருவதால், மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு, வாகன சாரதிகளுக்கு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஹாலிஎல, எட்டம்பிட்டிய ஆகிய வீதிகளூடாகப் பயணிக்கும் சாரதிகளுக்கே, பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மொரேதொட்ட வீதியின் மூன்று பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக, அப்பகுதிகளில், ஒருவழிப் போக்குவரத்துக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மொரேதொட்ட வீதியின் வளைவில் அமைந்துள்ள வீடொன்றும் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதால், அந்த வீட்டிலிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .