2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

பத்து இலட்சம் தொழில் வாய்ப்பில் மலையகமும் உள்வாங்கப்படும்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

நாட்டில் பத்து இலட்சம் பேருக்கான தொழில் வாய்ப்பை உருவாக்க போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். இவ் வேலை வாய்ப்பில் மலையக இளைஞர், யுவதிகளும் உள்வாங்க வாய்ப்பினை பெற்றுத் தருவேன் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஹட்டனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற, ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அங்கத்தவர் சேர்க்கும் வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் காலம் ஒன்றில் தலவாக்கலை நகரத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு, அங்கு உரை நிகழ்த்துகையில், நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ மற்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோருக்கு கிராமங்கள் இருக்கின்றன. அதுபோல, அமைச்சர் இராதாகிருஷ்ணன் மற்றும் திகாம்பரத்துக்கம் கிராமங்களை அமைத்துக் கொடுப்பேன் என்றார்.

இந்த உறுதிப்பாட்டுக் அமைவாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இங்கு மலையக பெருந்தோட்ட பகுதிகளை கிராமங்களாக்க பாரியளவில் உதவிகளை வழங்கியுள்ளார்” என்றார்.

இன்று மலையக மக்கள் சந்தோஷமான வாழ்க்கை முறையை முன்னெடுத்து செல்வதற்கு உந்து சக்தியாக அமைந்தது ஐக்கிய தேசியக் கட்சி.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் மூவின மக்களும் சமாதானமாக வாழும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மிக மோசமான இனவாத ஆட்சி முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலைமை இன்று மாற்றம் பெற்றுள்ளது. அத்தோடு, எதிர்காலத்தில் இடம்பெறும் உள்ளூராட்சி சபை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் கைப்பற்றுவதற்கான வேலைத்திட்டங்களையும் மக்கள் ஆதரவனையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .