Sudharshini / 2016 ஜனவரி 06 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை நகரில் முச்சக்கரவண்டிக்கென அறவிடப்படும் வரியினை முறையாக அறவிடுமாறும் கடந்த ஆண்டு அறவிடப்படாத வரியினை இவ்வாண்டில் அறவிடாது நீக்குமாறும் கோரி முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் இன்று புதன்கிழமை (06), பதுளை நகரில் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய பஸ்தரிப்பிடத்திலிருந்து ஆரம்பித்த இப்பேரணியானது, ஊவா மாகாணசபை வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
தங்களது கோரிக்கைகள் தொடர்பில் பதுளை நகரசபையின் தலைவர் உபாலி நிஸ்ஸங்க குணசேகரவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், தங்களின் கோரிக்கைக்கான தீர்மானத்தையும் எட்டிக்கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் மூலமாக, முச்சக்கரவண்டிகளுக்கான வரியானது நாளொன்றுக்கு 20 ரூபாயாக அறவிடத் தீர்மானிக்கப்பட்டதுடன் ஆறுமாத காலத்துக்கு ஒருமுறை அனுமதிப்பத்திரத்தினை புதிப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
1 hours ago