Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 19 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
கண்டி மாவட்டம் பன்விலை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசமானது. அதன் கன்னியமர்வு, வியாழக்கிழமை (19) நடைபெற்றது.
வாக்கெடுப்பின் போது, மேலதிக இரண்டு ஆசனங்களால் பன்விலை பிரதேச சபை ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியது.
மொத்தமாக 6 ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவாக சர்வஜன பலய (1 ஆசனம்) பொது ஜன ஐக்கிய முன்னணி (1 ஆசனம்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (1 ஆசனம் ) ஆகிய கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன.
இதன்போது 9 ஆசனங்களோடு ஐக்கிய மக்கள் சக்தி பன்விலை பிரதேச சபை ஆட்சியை கைப்பற்றியது.
5 ஆசனங்களை பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ( 2 ஆசனங்கள்) வாக்களித்தது.
சபையின் தலைவராக 9 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிஹில்ல கங்கானமகே அனுரஷாந்த தெரிவு செய்யப்பட்டார்.
எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் பந்துல பண்டார ரத்னாயக 7 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.
சபையின் உப -தலைவராக பொது பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த மஞ்சுள தேசப்பிரிய வீரசிங்க 9 வாக்குகளைப் தெரிவு செய்யப்பட்டார்.இவரோடு போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த வி.எஸ்..அரியநாயகம் 7 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025