R.Maheshwary / 2021 ஜூன் 02 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
பதுளை மாவட்டத்தில் சமுர்த்தி உதவி பெறும் 74,752 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கும் நடவடிக்கை இன்று (2) ஆரம்பிக்கப்பட்டதென, பதுளை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் டபிள்யு.எம்.பி.விஜயபண்டார தெரிவித்தார்.
இதற்காக 374 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், சமுர்த்தி பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று இந்த பணத்தை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக குறைந்த வருமானம் பெறும் 44,356 குடும்பங்கள் உள்ளிட்ட கொரோனா தொற்றால் வருமானங்களை இழந்த 2 இலட்சம் குடும்பங்களுக்கும் தலா 5,000 ரூபாயை வழங்க 1,000 மில்லியன் ரூபாயை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்வரும் வாரங்களில் அவர்களுக்கும் 5,000 ரூபாய் வழங்கப்படவுள்ளதென அவர் தெரிவித்தார்.
55 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
4 hours ago