2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பாடசாலைக்கு சுகாதார வசதிகள்

Kogilavani   / 2021 மார்ச் 29 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

மஸ்கெலியா சாமிமலை எனன்டேல் தமிழ் வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி, நீர்த்தாங்கி மற்றும் கைகளைக் கழுவுவதற்கான நீர்த்தொட்டி ஆகிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

சர்வதேச மருத்துவ நல நிறுவனத்தின் நிதியுதவியுடன், மஸ்கெலியா E4D நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கந்தையா விக்னேஸ்வரன், இவ்வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

நீர்த்தாங்கியைக் கையளிக்கும் நிகழ்வு, பாடசாலையின் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ஹட்டன் வலய கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X