2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

பாலத்தில் தவறி விழுந்த டிலான் எம்.பி

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 18 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

பதுளை- ஹாலிஎல- ரஜமாவத்தையில் வெள்ளையர்களால் நிர்மாணிக்கப்பட்ட பாலத்தை கண்காணிக்கச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெர்ணான்டோ குறித்த பாலத்தில் தவறி விழுந்துள்ளார்.

113 அடி நீளமான குறித்த பாலம் பயணிக்க முடியாதளவு பழுதடைந்து உள்ளதால்,  இதனூடாகப் பயணிக்கும் ஹாலிஎல மற்றும் ஊவாபரணம விவசாயிகள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர்.

குறித்த பாலத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நேற்று இடம்பெற்ற போது, அதனை கண்காணிப்பதற்காக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கு வருகைத் தந்துள்ளார்.

இதன்போது, பிரதேசவாசிகளின் கோரிக்கைக்கமைய, பாலத்தில் நடந்த டிலான் எம்.பி,  இவ்வாறு தவறி விழுந்துள்ளார்.

அப்போது  அருகிலிருந்த மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் சாமிக புத்ததாச உள்ளிட்டவர்கள் டிலானை காப்பாற்றியுள்ளனர்.

இந்த நிலையில்,கீழே விழுந்து இந்த பாலத்தின் நிலைமையை தான் நன்றாக புரிந்துக்கொண்டதால், விரைவில் இதனை புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X