R.Maheshwary / 2021 மே 31 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புதிய செயற்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொது செயலாளர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
மலையக பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி செலவுகளுக்கு உதவும் முகமாக ஆறுமுகன் தொண்டமான் புலமைப்பரிசில் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களினது வங்கி கணக்குகளில் அவர்களின் கல்விக்கு தேவையான ஒருதொகை பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியில் சிறந்த சித்தியைப் பெற்ற மலையகத்தைச் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு மடிக்கணணிகள் வழங்கும் செயற்திட்டத்துடன் வெகு விரைவில் தொடரும் என்றார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்காலத்தில் மே தின செலவீனங்களைக் கட்டுப்படுத்தி கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் என அண்மையில் இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தமைக்கமைவாக, அதன் முதல் செயற்பாடாகவே இத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டது. குறித்த செயற்றிட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாடுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது என்றார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago