Kogilavani / 2021 மார்ச் 18 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில், சமூகங்களுக்கிடையே கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு இரத்தினபுரி மாவட்ட கொரோனா தொற்று தடுப்புக் குழு பல திர்மானங்களை எடுத்துள்ளது.
இரத்தினபுரி மாவட்ட கொரோனா தடுப்பு குழுவின் கூட்டம், சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலனி லொக்குபோத்தாகம ஆகியோர் தலைமையில், இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் சமூகங்களுக்கிடையே கொரோனா தொற்றைத் தடுப்தற்கான சுகாதார விதிமுறைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை, இரத்தினபுரி மாவட்டத்தில் அனைத்து நகரங்களிலும் உள்ள வியாபார நிலையங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்கள் வியாபார நிலையங்களில் கூட்டமாகக் கூடுவது மற்றும் புடவைக் கடைகளில் ஆடைகளை அணிந்து பார்த்தல் என்பவற்றுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூட்டமாக கூடும் இடங்களான புடவைக் கடைகள் உட்பட ஏனைய வியாபார நிலையங்களை பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் அடிக்கடி கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாதவர்களை வியாபார நிலையங்களுக்குள் அனுமதிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வியாபார நிலையங்களை சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் வியாபார நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை வெப்பமாணி மூலம் பரிசோதனை செய்து உள்ளே அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026