மொஹொமட் ஆஸிக் / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஞாபகார்த்த அறக்கட்டளையின் இலங்கைக் கிளையின் ஏற்பாட்டில், மாணவர்களுக்கான புத்தூக்க வகுப்புகள், கண்டி குண்டசாலை விவேகாநந்தா தமிழ் வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றன.
புத்தூக்க வகுப்புகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில், பலகொல்ல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் தசநாயக்க, அறக்கட்டளையின் இலங்கை கிளைத் தலைவர் என்.கருணாகரன் (சிவா), செயலாளர் எம்.ஹைதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேற்படி அறக்கட்டளையின் இலங்கைக் கிளை, பாடசலை மாணவர்களது கல்வி அபிவிருத்தித் தொடர்பான செயற்றிட்டங்கள் பலவற்றை, மலையகப் பகுதிகளில் முன்னெடுத்து வருன்றமை குறிப்பிடத்தக்கது.
அத்திட்டத்தின் கீழ், வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள குண்டசாலை பிரதேச பாடசலைகளான குண்டசலை வாணி தமிழ் வித்தியாலயம், குண்டசாலை விவேகாநந்தா தமிழ் வித்தியாலயம், ரஜவல தமிழ் மகா வித்தியாயலம் என்பவற்றின் மாணவர்களுக்கு, புத்தூக்க வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago