Editorial / 2017 செப்டெம்பர் 03 , பி.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச
பதுளை, ஹிதகொட வயல்நிலப்பகுதியில் அமைந்துள்ள, புராதன நீரூற்றொன்று திடீரென அதன் சிறப்பை இழந்துள்ளதாக, பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தனர்.
மன்னர் காலம் தொட்டு இருந்து வந்த இயற்கை நீரூற்றானது, இவ்வாறு திடீரென மாற்றம் பெற்றுள்ளமையானது, புவியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பிரதிபளிப்பதாக, அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டினர்.
குறித்த நீருற்றில் முன்னர் தினம் 500க்கும் அதிகமானோர் நீராடுவர் எனவும் நீர்வளம் குன்றாதிருந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், இப்பகுதிக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளும், இந்த நீரூற்றைக் காண வருவதுடன், அதில் நீராடிவிட்டே செல்வர் எனவும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.
மேலும், இதில் நீராடுவதன் மூலம் தேகாரோக்கியம் கிடைக்கும் எனப் பரம்பரை பரம்பரையாக அங்கு வாழ்ந்து வரும் மக்களிடையே நம்பிக்கை நிலவுகின்றது.
இந்நிலையில், இந்த நீரூற்றில் இருந்து தற்போது சிறிதளவேனும் நீர் கிடைக்கப்பெறாமை தமக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
எனவே, இந்த நிலைமைக்கு புவியில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணம் எனில் அது தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

41 minute ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
13 Apr 2026