Janu / 2026 பெப்ரவரி 10 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூனை ஒன்றை பிடித்து அதனை சித்திரவதை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வலப்பனை நீதவான் ஞாயிற்றுக்கிழமை (08) உத்தரவிட்டுள்ளார். திப்படுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இளைஞன் ஒருவன் பூனையை சித்திரவதை செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் அண்மையில் பரவின. இந்த காணொளிக்கு விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனையடுத்து இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான இளைஞன் ஞாயிற்றுக்கிழமை (8) வலப்பனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். அன்றையதினமே நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago