2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பெண் துஷ்பிரயோகம்; மூவர் கைது

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 19 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் சதீஸ்

பொகவந்தலாவை- டியன்சின் தோட்ட பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட  பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, குறித்த பெண்ணை தாக்கிவிட்டு தலைமறைவாகியிருந்த மூன்று சந்தேக நபர்களை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று  (18) இச்சம்பவம்  இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மது போதையில் வந்த மூவர் குறித்த பெண்ணை தாக்கி அவரை துஷ்பிரயோகப்படுத்தி விட்டு, பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளனர்.

 இந்தப்  பெண் பலத்த காயங்களோடு 1990என்ற அவசர அம்புலன்ஸ் வண்டியின் ஊடாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது அவர்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த பட்டுள்ளதாக வைத்திய அதிகாரியின் அறிக்கை ஊடாக உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தை சேர்ந்த 49வயதுடைய பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர், தொடர்ந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மூவரும் டியன்சின் தோட்டத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்ததுடன்,

சந்தேகநபர்களை  ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X