Editorial / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}



ரஞ்சித் ராஜபக்ஷ, கே.சுந்தரலிங்கம் , ரவிந்திர விராஜ் அபயசிறி
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் சில, நேற்று முன்தினம் (28) நள்ளிரவு முதல் மேற்கொண்டு வரும் (29) பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, மலையகத்தின் பொதுப் போக்குவரத்துக்கும் பாரியப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொலன்னாவையில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமையக வளாகத்தில், நேற்று முன்தினம் இரவு (28) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்தே, பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
கொலன்னாவ பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு, முன்னாள் பெற்றோலிய வளதுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, நேற்று இரவு சென்றிருந்தபோது முறுகல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, அமைச்சரின் பாதுகாவலர்கள் மேற்கொண்டத் துப்பாக்கிச் சூட்டினால், ஒருவர் பலியானதுடன், மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளாகினர்.
எனவே, இச்சம்பவத்தைக் கண்டித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணத்துங்கவை கைது செய்யும்வரையும் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என, இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் பிரதித் தலைவர் கே.ஜே.பிரேமாந்த குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டிசல் மற்றும் பெற்றோல் தீர்ந்து போய் உள்ளதாகவும், பல எண்ணெய் நிரப்பு நிலையங்களில் பெற்றோல், கையிருப்பு மிகவும் குறைந்த அளவே உள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மாத்தளை, ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை, நுவரெலியா, கண்டி உள்ளிட்ட பிரான நகரங்களிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவியதுடன், எரிபொருள்களைப் பெற்றுக்கொள்வதற்காக, வாகன சாரதிகள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இதனால் பிரதான நகரங்களில், வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago