Editorial / 2025 ஒக்டோபர் 24 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ இராணிகாடு மற்றும் சென்விஜயன்ஸ் ஆகிய தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஆறு தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை 10.30மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ சென்விஜயன்ஸ் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த நான்கு தொழிலாளர்களை கொட்டிய குளவிகள், இராணிகாடு தோட்ட பகுதியில் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளர்களையும் கொட்டியுள்ளது.
இதில், பெண் தொழிலாளர்கள் ஐவரும் ஆண் தொழிலாளர் ஒருவருக்கு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் ஆறு பேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago