Kogilavani / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்றும் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தோட்ட நிர்வாகங்கள், தொழிலாளர்கள் மீது அடாவடி போக்கைக் கடைப்பிடித்து வருவதாக, தொழிலாளர்கள் தமது கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தொழிலார்களின் 1,000 ரூபாய் சம்பள விடயத்தில், ஆரம்பம் முதலே, தோட்டக் கம்பனிகள் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர் என்றும் எக்காரணம் கொண்டும் சம்பள உயர்வை தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடாது என்ற எண்ணத்திலயே அவர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாவாக நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானிக்கு, பெருந்தோட்டக் கம்பனிகள் கோரும் இடைக்கால தடையுத்தரவை விதிக்க, மேன் முறையீட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததையடுத்து, தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லிந்துலை பகுதியில் ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில், இறுதிக்கிரியைகளுக்காக வழமையாக குளி வெட்டுவதற்காக வழங்கப்படுகின்ற நால்வரை வழங்க முடியாது என தோட்ட நிர்வாகமொன்று தெரிவித்துள்ளதுடன், மரண வீட்டுக்காரர்களை பணம் கொடுத்து அதனை செய்துகொள்ளுமாறு மனிதாபிமானமற்ற முறையில் தெரிவித்துள்ளனர் எனச் சாடினார்.
ஒரு தோட்டத்தில், ஒருவர் மரணமடைந்துவிட்டால் அவரை புதைப்பதற்கு குழிவெட்டுவதற்காக, தோட்ட செலவில் நால்வரை வழங்குவNது வழமையான நடைமுறை என்றும் ஆனால் அந்த நடைமுறையை குறித்த தோட்ட நிர்வாகம் மீறியுள்ளதாகவும் தெரிவித்தார்.அத்துடன் தோட்டத்தில் நாற்கூலிகளாக வேலைச் செய்பவர்களின் வேலைப்பழுவையும் தோட்ட நிர்வாகங்கள் அதிகரித்துள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே தோட்டத் தொழிலாளர்களின் பொறுமையை சோதிக்க யாராவது நினைத்தால் அதன் விளைவுகள் மிகவும் பாரதூரமாக இருக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'நாங்கள் அமைதியாக இருப்பது யாருக்கும் பயந்துகொண்டு என யாரும் நினைத்தால் அது அவர்களின் முட்டாள்தனம். எனவே தோட்டத் தொழிலாளர்களின் விடயத்தில் தோட்ட கம்பனிகள் முறையான நடைமுறையைப் பின்பற்றாவிட்டால் தோட்ட நிர்வாகத்துக்கு தொழிலாளர்கள் பாடம் புகட்ட வேண்டிய ஒரு நிலைமை ஏற்படும்' என்றும் அவர் எச்சரித்தார.
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago