Editorial / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, எஸ்.சதிஸ், எஸ்.கணேசன்,
பௌர்ணமி தினமான இன்று (24), ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பதற்கு முயன்ற குற்றச்சாட்டில் ஒருவரை, ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், 16 மதுபானப் போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகிசயத் தகவலையடுத்து, ஹட்டன், வெலிஓயா பகுதியிலுள்ள வீடொன்றைச் சுற்றிவளைத்துச் சோதனையிட்ட பொலிஸார், மதுபானப் போத்தல்களுடன் மேற்படி நபரைக் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த நபரொருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
15 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
6 hours ago