Sudharshini / 2016 ஜூன் 15 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கண்டியில் நடைபெறவுள்ள விசேட நிகழ்வில், 35 வருட சேவையை நிறைவுசெய்த நான்கு சமயங்களைச் சேர்ந்த ஆசிரியர் 250 பேர் கௌரவிக்கப்படவுள்ளனர்.
எதிர்வரும் சனிக்கிழமை(19) மாலை 3 மணிக்கு, ஸ்ரீதலதா மாளிகைக்கு அண்மித்த தேவ வீதியில் அமைந்துள்ள பொசன் வலய பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், “தகம் பாசல்” ஆசிரியர்;, அறநெறிப் பாடசாலை ஆசிரியர்;, மத்ரசா உஸ்தாத்கள், கிறிஸ்தவ சமய ஆசிரியர், பௌத்த மத குருக்கள் ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளனர்.
ஆளுநர் திருமதி நிலூக்கா ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமய ஆசிரியராகக் கடமைப் புரிந்து 35 வருட கால சேவையை நிறைவு செய்தவர்கள் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர்.
மத்திய மாகாண ஆளுநர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள பொசன் வலய நிகழ்வுகள், கண்டி நாக தேவாலயத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Apr 2026