Kogilavani / 2016 ஜனவரி 08 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்
'தோட்டபுறங்களிலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு இவ்வருடம் மத்திய மாகாண கல்வி அமைச்சுக்கு 205 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் 50 மில்லியன் அல்லது 100 மில்லியன் நிதியே மத்திய மாகாண அபிவிருத்தி திட்டத்துக்கு ஒதுக்கப்படும். இம்முறை தோட்டபுற பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.
நானுஓயா, டெஸ்போட் எவாக்கோ தோட்ட ஆலய புனரமைப்புக்காக கலசங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'தோட்டபுற பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு இம்முறைதான் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல விவசாயத்துறைக்கும் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னைய காலகட்டத்தில் விவசாய அமைச்சு கிராம மட்டங்களிலே காணப்பட்டது. தற்போது எமது மக்களும் பயன்பெற வேண்டும், விவசாயதுறையில் முன்னேற வேண்டும் என்பதற்காக 230 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அரசியல் ரீதியில் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் சேவை செய்;ய தயாராக இருக்கின்றேன்' என்றார்.

4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago