Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.தி. பெருமாள்
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கான பணம் முறையாக வழங்கப்படாமை காரணமாக எதிர்வரும் காலங்களில் உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹட்டன் வலயத்துக்குட்பட்ட ஒரு சில பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கான பணம் கடந்த மே மாதம் முதல் இன்று வரையில் வழங்கப்படாததினால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக ஹட்டன் கல்வி வலயக் காரியாலயத்தின் அதிகாரியிடம் கேட்டபோது,
'ஒருசில பாடசாலைகளில் உணவு வழங்கியவர்களுக்குக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை. கொடுப்பனவுகளுக்கான நிதி எமக்குக் கிடைக்கவில்லை. கடந்த மே மாதம் எமக்குக் கிடைத்த நிதியின் மூலம் ஒருசிலருக்குக் கொடுப்பனவை வழங்கினோம். ஏனையோருக்கு மே, ஜூன் மாதங்களுக்கான கொடுப்பனவை வழங்க 30 இலட்சம் ரூபாய் நிதி கிடைக்கப்பெறவுள்ளது. அப்பணம் கிடைத்தவுடன் அவர்களுக்கான கொடுப்பனவை உடன் வழங்குவோம்' என்றார்.
22 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
52 minute ago
1 hours ago