Kogilavani / 2015 நவம்பர் 24 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
புதிய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு-செலவு திட்டத்தில் நீண்ட இடைவெளியின் பின்பு பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பாக பல முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கூறினார்.
வரவு -செலவு திட்டம் தொடாபாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'பல வருடங்களுக்கு பிறகு இந்த வரவு-செலவு திட்டத்திலே கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்கால சந்ததியையும் நாட்டின் நன்மை கருதியும் இந்த பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெருந்தோட்ட பாடசாலை அபிவிருத்திக்காக கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவு திட்டத்தில் எமது மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டே வந்தனர். ஐம்பதாயிரம் வீடுகள் கட்டித்தருவதாக பலமுறை கூறப்பட்டபோதிலும் அவை நடைமுறைபடுத்தப்படவில்லை. ஆனால், தற்போது 10 வருடங்களுக்கு மேல் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு அவர்களின் குடியிருப்பு சொந்தமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் நாங்கள் ஆரம்பித்த 25 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மிக விரைவில் இந்த பாடசாலைகளின் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த வரவு-செலவு திட்டத்தை விமர்சிக்கின்றவர்கள் கடந்த காலங்களில் உள்ள விடயங்களையும் கருத்தில் கொண்டு விமர்சிக்க வேண்டும்.
மலையகக் கல்வி அபிவிருத்தியை மையமாகக் கொண்டு இந்த வரவு-செலவு திட்டத்தில் விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை காலமும் நாங்கள் இந்த நாட்டில் மறக்கப்பட்ட சமூகமாக இருந்த காலம் மாறி, இன்று எமது விடயங்களும் வரவு-செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமையானது நாம் பெற்ற வெற்றியாகவே கருத வேண்டும்' என்றார்.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago