Sudharshini / 2016 ஜனவரி 04 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
கஞ்சா கலந்த பாபுல் போதைப்பொருட்களை வைத்திருந்த ஆறு இளைஞர்களுக்கு, தலா 2500 ரூபாய் அபராதம் விதித்து ஹட்டன் நீதவான் விடுதலை செய்துள்ளார்.
ஹட்டன் புகையிரத நிலையத்தில் இன்று (04) பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்த சிவில் பொலிஸார், மேற்படி இளைஞர்கள் 6 பேரையும் சோதனைக்குட்படத்திய போது, அவர்களிடமிருந்து கஞ்சா கலந்த பாபுல் போதைப்பொருள் அடங்கிய 7 பக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, மேற்படி ஆறு பேரையும் கைதுசெய்த பொலிஸார், அவர்களை ஹட்டன் நீதவான் பிரசாத் லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, ஆறு பேருக்கும் தலா 2500 ரூபாய் அபராதம் விதித்ததுடன் எச்சரிக்கை செய்து விடுதலை செய்தார்.
அநுராதபுரம், நொச்சியாகம பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்ல வந்த இளைஞர்களே இவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026