2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

போதைபொருள் பயன்படுத்திய பெண் உட்பட இளைஞர் நால்வர் கைது

Kogilavani   / 2016 மே 08 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

போதை பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்த 20 வயது பெண் உட்பட இளைஞர்கள் நால்வரை கண்டி, குருநாகல் வீதியில் வைத்து கட்டுகஸ்தோட்டை பொலிஸார் சனிக்கிழமை(7) கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 5 கிராம் 9 மில்லிகிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளனர்.

20-25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரிடமிருந்து 2 கிராம் 8 மில்லிகிராம் ஹெரோயினையும் மற்ற இருவரிடமுமிருந்து 3 கிராமும் 1மில்லிகிராம் ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .