Kogilavani / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
எமது நாட்டுக்கு பொருத்தமான கொள்கைகளை உள்ளடக்கிய புதிய அரசியல் கட்சியொன்று உருவாகுமேயானால் அதற்கு பூரண ஆதரவு வழங்கத் தான் தயாராக உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மஹாநாயக்க தேரர்களை, புதன்கிழமை(3) சந்தித்தப்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
இன்று நாட்டில் எதிர்க் கட்சி என்ற ஒன்றில்லை. எதிர்க் கட்சியின் பொறுப்பை நிறைவேற்றுவதற்கும் நாட்டை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கும் புதிய கட்சியின் அவசியம் தற்போது உணரப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொருத்தமான கொள்கைகளுடன் புதிய கட்சி ஒன்றை யாரேனும் தொடங்கினால் அதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக கவனத்தில் கொள்ளலாம். அரசியல்வாதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு சிலரை மட்டும் கைதுசெய்வதை எண்ணி மனம் வருந்துகிறேன்' என்றார்.
37 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
41 minute ago
1 hours ago