Sudharshini / 2016 ஜூலை 05 , பி.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.ஆ.கோகிலவாணி
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாமல், பேச்சுவார்தையும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பிரச்சினைக்கு தீர்வாக முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ள தீர்வு தொடர்பில் ஆராய்வதற்கான விசேட சந்திப்பொன்றை பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இச்சந்திப்பு கண்டியிலுள்ள, இலங்கை தோட்டத் தொழிலாளர் செங்கொடிச் சங்கத்தின் காரியாலயத்தில் நாளை புதன்கிழமை (6) காலை 10.30க்கு இடம்பெறவுள்ளதாக லங்கா தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.இராமநாதன் கூறினார்.
'முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ள புதிய முறைமை தொடர்பில் கருத்துக்கணிப்புகளை பெறுவதற்கான அறிவித்தல்கள், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவினால் பெருந்தோட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் முதலாளிமார் சம்மேளனத்தின் நன்மை, தீமையை ஆராய்வதற்காக அவசரமாக கூடவுள்ளோம்' என அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, கூட்டொப்பந்தம் தொடர்பிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் நவீன் திசாநாயக்க தலைமையில் நடைபெறலாமென தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
15 minute ago
27 minute ago
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
31 minute ago
36 minute ago