Editorial / 2026 ஏப்ரல் 13 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு: கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி சுவாமி மலைப் பகுதியில், மின்சாரம் தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் (11) காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கச்சக்கொடி சுவாமி மலைப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை வீரசிங்கம் (வயது 59) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இன்று காலை தனது பயிர்ச்செய்கை நிலத்திற்கு அருகில் உள்ள வாய்க்காலிலிருந்து, நீர் இறைக்கும் இயந்திரம் (Water Pump) மூலம் நீரைப் பெறுவதற்கு அவர் முயற்சித்துள்ளார். இதன்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த கொக்கட்டிச்சோலை பொலிஸார், உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மின்சாரக் கசிவு காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago