Niroshini / 2016 மே 06 , மு.ப. 08:49 - 1 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ
“தோட்ட மக்கள் நிரந்தர வீடுகளின்றி காலந்தோறும் லயன் காம்பிராக்களில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் பல்வேறு பிரச்சினைக்கும் முகம் கொடுக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு அரசாங்கம் உதவிகளை செய்து வருவதைபோன்று அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் துனேஷ் கங்கந்த தெரிவித்தார்.
இரத்தினபுரியில் 'ஆகல்பய' என்ற பெயரில் புதிய அரச சார்பற்ற அமைப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு நேற்று(05) இரத்தினபுரி வெரலுப்ப உதார ஹோட்டலில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இரத்தினபுரியில் ஆரம்பிக்கப்பட்டள்ள 'ஆகல்பய' அமைப்பின் மூலம் தமிழ் சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் இன ஒற்றுமையை மேலும் பலபடுத்த முடியும்.
மக்களுக்கு அனர்த்தங்கள் ஏற்படும்போது ஆகல்பய போன்ற அரச சார்பற்ற அமைப்புகள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து செயற்பட வேண்டும். அப்படி செய்ற்படும்போது மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை அதிகளவில் செய்ய முடியும்” என்றார்.
'ஆகல்பய' அமைப்பின் தலைவர் நாலக அதுக்கோரளை உரையாற்றுகையில்,
“மாணிக்கக்கல் அகழ்வின்போது விஷ வாய்வு வெடித்து மற்றும் மண் திட்டு விழுந்து இறக்கும் தொழிலாளர்களுக்கு மாணிக்கக்கல் அதிகார சபையின் மூலம் எந்தவிதமான நிதி உதவிகளும் வழங்கப்படுவதில்லை.
மாணிக்கக்கல் தேன்றுவதற்கு தேவையான இடங்களை தெரிவு செய்து அதை மாணிக்கக்கல் அதிகார சபையின் மூலம் பதிவு செய்வதற்காக செல்லும்போது சபை 5,000 ரூபாய், 10,000 ரூபாய், 25,000 ரூபாய் பணம் மாணிக்கக்கல் அதிகார சபை அறவிடுகின்றது.
ஆனால், மாணிக்கக்கல் அகழ்வின்போது திடீரென இறக்கும் தொழிலாளர் குறித்து மாணிக்கக்கல் அதிகார சபை அக்கறை கொள்வதில்லை. பணத்தை சேகரித்து கொழும்பு-காலி வீதியில் மிகப் பெரிய மாணிக்கக்கல் அதிகார சபை கட்டிடத்தொகுதி ஒன்றை அமைத்து வருகின்றார்கள்.
இரத்தினபுரி மாவட்டத்தில் மாணிக்கக்கல் அகழும் இடங்கள் எத்தனை உள்ளன? இம்மாவட்டத்தில் எத்தனைபேர் மாணிக்கக்கல் அகழ்வு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்? இது குறித்து சரியான விபரங்கள் மாணிக்கக்கல் அதிகார சபைக்கு தெரியாது.
எனவே, இவ்வாறான விடயங்களை சரியான முறையில் அறிந்து கொள்வதற்கும், மாணிக்கக்கல் அகழ்வின்போது விச வாய்வு வெடித்து மற்றும் மண் திட்டு விழுந்து இறக்கும் தொழிலாளர்களுக்கு நிதியுதவிகளை பெற்று கொடுப்பது குறித்தும் 'ஆகல்பய' அமைப்பின் ஊடாக மாணிக்கக்கல் அதிகார சபைக்கு அழுத்தம் கொடுப்போம்” என்றார்.

3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
prem Tuesday, 09 April 2019 05:56 AM
great work congress Akalpaya organization best of luck
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago