Kogilavani / 2016 ஜனவரி 08 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
நுவரெலியா, கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பெரட்டாசி தோட்ட வைத்தியசாலை மற்றும் பாதை அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுப்பதாகவும் மத்திய மாகாண தோட்ட உட்கட்மைப்பு அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.
நுவரெலியா, கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட 15 தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 8,000க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பெரட்டாசி தோட்ட வைத்தியசாலை அமைக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில், தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கும் திட்டத்தின் கீழ், பல வைத்தியசாலைகள் தோட்ட நிர்வாகத்திலிருந்து அரசாங்க வைத்திய சேவைக்குள் உள்வாங்கப்பட்டன. இதில் பெரட்டாசி தோட்ட வைத்தியசாலையும் அடங்கும்.
இந்நிலையில், இவ்வைத்தியசாலை 3 வருடங்களுக்கு முன் திறக்கப்பட்ட போதும் தற்போதும் மருந்தகமாகவே செயற்பட்டு வருகின்றது.
இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே எம்.ராமேஷ் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் சிபாரிசுக்கு அமைய இந்த வைத்தியசாலை அமைக்கப்பட்டு விடுதிக்கான வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது.
புதிய அரசாங்கம் வந்ததும் குத்தகை தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்பட்டதால் காலதாமதம் ஏற்பட்டது. இப்;பிரச்சினை தொடர்பில் மத்திய மாகாண முதலமைச்சர்; சரத் ஏக்கநாயக்கவிடமும் மத்திய மாகாண சுகாதார அமைச்சர் பந்துல்ல யாலேகமவிடமும் கலந்துரையாடி உடனடி தீர்வை பெற்றுகொடுப்பேன்' என்றார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago