2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பிரஸ்டனிலிருந்து இன்றும் சிறுத்தையின் உடலம் மீட்பு

Administrator   / 2016 மே 09 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜா, ஆர்.ரமேஷ், கணேசன்

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்;குட்பட்ட பிரஸ்டன் தோட்ட தேயிலை தோட்டத்திலிருந்து இன்றும் (9),  2 1ஃ2 அடி நீளமான சிறுத்தைக் குட்டியின்; உடலம் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

தேயிலை மலையில் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்த  தொழிலாளர்கள், சிறுத்தையின் உடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதன்போதே  அவ்விடத்திலிருந்து மற்றொரு சிறுத்தை தப்பியோடியதாகவும் இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற மூன்று பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

அக்கரப்பத்தனை பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, இச்சம்பவம் தொடர்பில் வனவிலங்கு பாதுகாப்பு சபைக்கு அறிவித்துள்ளனர். மேலும், சிறுத்தையின் உடலத்தை பரிசோதனை செய்வதற்காக வனவிலங்கு அதிகார சபைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேற்படி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 4 அடி நீளமான  சிறுத்தையொன்றின் உடலம் மீட்கப்பட்டு நுவரெலியா வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .