Gavitha / 2016 மார்ச் 31 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ரமேஷ்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிரூட் பகுதியில் இன்று வியாழக்கிழமை (31) இடம்பெற்ற விபத்தினால், இருவர் படுகாயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீதி வழியாக முச்சக்கரவண்டியில் சென்றுக்கொண்டிருந்த இருவரை பொலிஸார் வழிமறித்துள்ளனர். இதற்போது பொலிஸாரை அலட்சியப்படுத்தி விட்டு, குறித்த இருவரும் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
தப்பிச் சென்றவர்களை பொலிஸார் துரத்திச் சென்ற போது, வளைவொன்றில் வைத்து குறித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் காரணத்தினால் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதியும் மற்றுமொருவரும் படுகாயமடைந்துள்ளனர் என்றும் அவ்விருவரும் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவித்த பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago