2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மடுல்சீமை சிறிய நகரம் அபிவிருத்தி

Kogilavani   / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பதுளை மாவட்டத்தின் மடூல்சீமை சிறிய நகரத்தை, சகல வசதிகளுடன் கூடிய நகரமாக மாற்றியமைப்பதற்கு, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 

மேற்படி நகரத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.

குறிப்பாக பஸ் நிலையம், பொதுச்சந்தை, குடிநீர்த்திட்டம், கழிவு மற்றும் குப்பைக்கூளங்கள், முகாமைத்துவம், பொதுமலசல கூடம் போன்ற இன்னோரன்ன பொது வசதிகள் இல்லாத நிலையே, இங்குக் காணப்படுகின்றன.

இக்குறைபாடுகளை நிவர்த்திசெய்வதற்கு,  இடவசதியின்மை மிகப்பெரிய காரணமாக இருந்து வருகின்றது.  மடூல்சீமை சிறிய நகரத்தைச் சூழ, தேயிலைத் தோட்டங்களே உள்ளன. 

இந்நிலையில் இது தொடர்பில் ஆராய்வதற்காக,   பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், நகர அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் சுமிந்த ராஜபக்ஷ,  நகரத் திட்டமிடல் அதிகாரி சமிந்த குமார, உதவியாளர் இசுறு ஆகியோர், மடூல்சீமை நகருக்கு விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது, நகரை அபிவிருத்தி செய்வது குறித்தும், நிலவும் அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து, மாதிரி சிறுநகரமாக மாற்றியமைப்பது குறித்தும் கலந்துரையாடியதுடன், மடூல்சீமையின் ஏனைய குறைபாடுகள் குறித்தும் ஆராய்ந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X