R.Maheshwary / 2021 ஜூலை 13 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
மஸ்கெலியா- நல்லதண்ணி, நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியின், பிரவுன்லோ தோட்டத்துக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் நீர் வழிந்தோடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மதகு அடைப்பட்டிருப்பதால், மழையுடன் அதிகரித்த நீர் பிரதான வீதியூடாகப் பெருக்கெடுப்பதால்,குறித்த வீதியின் ஒரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த வீதியுடனான போக்குவரத்து, ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மண்சரிவு ஏற்பட்ட பகுதியைப் புனரமைப்பு செய்யும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026