2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மதுபானசாலைகளை திங்களன்று மூடுங்கள்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 20 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

தீபாவளித் தினமான எதிர்வரும் 24ஆம் திகதி, நாட்டில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் பகுதிகளில் மதுபானசாலைகளை மூடிவிடுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

கலால் திணைக்களஆணையாளர் நாயகத்திற்கு, கல்வி இராஜாங்கஅமைச்சர் அரவிந்தகுமார் அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை,  இரத்தினபுரி,கேகாலை ஆகிய பகுதிகளில் பெரும்பான்மையாக இந்தியா வம்சாவளித் தமிழ்கள் வாழ்ந்து வருகின்றனர் ஆகையால், குறித்த பிரதேசங்கள் மற்றும் தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதிகளில் தீபாவளி தினத்தன்று மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X