2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

மத்திய மாகாணத்தில் அறநெறிக் கல்வியை விரிவுப்படுத்த நடவடிக்கை

Kogilavani   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சாமிவேல் சுதர்ஷினி

மத்திய மாகாண பாடசாலை மாணவர்களுக்கு இடையில் அறநெறிக் கல்வியை விரிவுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சர் எம்.ரமேஷ் தெரிவித்தார்.

இதற்கமைய இம்மாகாணத்தில் அறநெறிப் பாடசாலைகளின் செயற்பாடுகளை விரிவுப்படுத்தும் வகையில் அறநெறி பாடசாலைகளை முன்பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

மத்திய மாகாணத்தில் அறநெறிப் பாடசாலைகளின் அபிவிருத்தி குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்தும் தெரிவித்த அவர், 'அறநெறிக் கல்வியை மாணவர்கள் மத்தியில் கொண்டுச் செல்ல வேண்டும் என்பதை தெளிவுப்படுத்துவதற்காக மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களுக்கு  கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகின்றது. வாரத்தில் ஒரு நாள் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் ஊடாக கட்டாயமாக அறநெறி பாடசாலைகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என்றார்.

2016ஆம் ஆண்டு 50 சதவீதமான அறநெறிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய  நடவடிக்கை எடுத்துள்ளளோம். அதேவேளை, மத்திய மாகாணத்திலுள்ள ஆலயங்களில் முறையாக பூசைகள் நடைபெறாதுள்ளன. எனவே, அது  குறித்தும்  கவனம் எடுக்கப்படும். இம்மாகாணத்திலுள்ள ஒவ்வொரு இந்து ஆலயங்களிலும் 2016 ஆம் ஆண்டுக்கு பின் ஒவ்வொரு நாளும் கட்டாயம் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்  எனவும் ஆலய பரிபாலன  சபை  உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .