Sudharshini / 2016 பெப்ரவரி 09 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
மதுபோதையில் நீதிமன்றத்துக்கு சாட்சியமளிக்க வந்த தனியார் பஸ் நடத்துனர் ஒருவருக்கு, பதுளை நீதவான் நீதிமன்ற நீதவான் அபராதத்துடன் சிறைத்தண்டனை வழங்கிய சம்பவம் ஒன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
பதுளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கொன்றுக்காக சாட்சியமளிப்பதற்கே தனியார் பஸ் நடத்துனர் ஒருவர் மதுபோதையில் அங்கு வந்துள்ளார்.
இதனையடுத்து, அவரை கைதுசெய்த நீதிமன்ற பொலிஸார், அவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, ஆயிரத்து ஐநூறு ரூபாய் அபராதமும் ஆறுமாத கால ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையையும் விதித்து பதுளை நீதவான் ஆர்.எம்.சி.ராஜபக்ஷ உத்தரவிட்டார்.
24 minute ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
13 Apr 2026