Editorial / 2018 ஜூன் 24 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
6.ரஞ்சித் ராஜபக்ச
ஹட்டன் - மஸ்கெலிய வீதியில் பஸ் ஒன்றில் மோதி மனநலம் குன்றிய பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.
ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியின் கோர்க்கி தோட்டம் அருகில் நேற்று மாலை 5 மணியளவில் இந்த சம்வம் இடம்பெற்றுள்ளது.
வேகமாக பயணித்த பஸ்ஸுக்கு முன்னால் அந்த பெண் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் மஸ்கெலிய பிரதேசத்தில் வைத்து சிலரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பயணித்த பல வாகனங்களின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்ய முற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? உள்ளிட்ட தகவல்கள் எதுவும் தெரியவராத நிலையில் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
14 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
6 hours ago