Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 நவம்பர் 23 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை பிரசவித்த மஸ்கெலியா புரன்வீன் ராணிதோட்டதை சேர்ந்த 31 வயதான கிருஷ்ணகுமார் பாக்கியலட்சுமி, என்ற இளம் தம்பதியினரின் குடும்ப நிலைமையை கருத்திற் கொண்டு அவர்களுக்கு உதவித் தொகையான முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபா வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான ‘சமூக ஜோதி’ வாமதேவன் தியாகேந்திரனினால் முதற் கட்டமாக இவ்வாறு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் சமூக ஜோதி வாமதேவன் தியாகேந்திரன் நாடளாவிய ரீதியில் இன, மத வேறுபாடின்றி பல்வேறு மனிதாபிமானப் பணிகளை தனது சொந்த நிதியின் மூலம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .