Editorial / 2020 மே 22 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை பகுதியில் தனது உயிரையும் துச்சமென மதித்து, ஓர் உயிரை காப்பாற்றிய அந்த மனிதநேயத்துக்கு தலைவணங்குவதாக, மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தலாவக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்த யுவதியைக் காப்பாற்றுவதற்காகச் சென்று உயிரிழந்த ஆப்தீன் ரிஸ்வானின் நற்செயலை பாராட்டியுள்ள அவர் அது தொடர்பில் மேலும் கூறியதாவது,
இன,மத,மொழிக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் மனிதர்களே என்பதை இந்த உலகுக்கு உணர்த்தி சென்றுள்ளான் ஆப்தீன் ரிஸ்வான் என்றும் அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவருடைய ஆத்மா சாந்தியடைவதற்கும் இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
'அரசியல் காரணங்களால்தான் இன்று இனங்கள் பிரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மக்களே அவற்றுக்கெல்லாம ஒருபடி மேல் சிந்தித்து செயற்படுகின்றனர்' என்றும் 'அந்த வகையில் ரிஸ்வானின் செயற்பாடு மதிக்கதக்கது' என்றும் தெரிவித்தார்.
6 hours ago
9 hours ago
9 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago
17 Apr 2026