2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

மனைவியைக் கொன்ற கணவன் கைது

Editorial   / 2024 மே 21 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆறுமுகம் புவியரசன்

லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜனாதாபுர , தம்பிட்டியவத்த பகுதியில் திங்கட்கிழமை (20)  சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலைக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த பெண்ணின் சடலம்  லுணுகலை ஜனதாபுர , தம்பபிட்டிய வத்த, கும்புக்கன் ஓயாவில் மீட்கப்பட்டது.  இரு பிள்ளைகளின் தாயான 38 வயதுடைய குறித்த பெண்ணின் தலையில் பலத்த காயம் காணப்பட்டதுடன் , தனது தாயின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக 17 வயதுடைய மூத்த மகள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார்.

 கொலையாளியான சந்தேகநபரை, வாடகைக்கு அமர்த்திய  முச்சக்கர வண்டியின் சாரதி(36 வயது ) பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர்,

 

சந்தேக நபர் 45 வயதான கணவன், தலைமறைவாகி இருந்த நிலையில் லுணுகலை நகரில் வைத்து அன்றிரவே கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப் பட்ட ஆரம்பக் கட்ட விசாரணையின் போது முதலில் சிறிய கல் ஒன்றினால் தலை பகுதியை தாக்கியதன் பின்னர் பெரிய கல் ஒன்றினால் தாக்கி கொலைச“ செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இருவருக்கும் இடையே மிக நீண்ட காலமாக குடும்ப தகராறு காணப்பட்டதாகவும் இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதாகவும் பெண்ணின் வீட்டு பகுதிக்கு குறித்த நபர் செல்ல கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர்   சந்தேக நபரையும்,  முச்சக்கர வண்டியின் சாரதியையும் பசறை நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X