Freelancer / 2021 டிசெம்பர் 23 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
2007ஆம் ஆண்டு பெண் ஒருவரை கட்டையால் தாக்கி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தேகநபரான உயிரிழந்த பெண்ணின் கணவர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் 2007 ஆம் ஆண்டு தலவாக்கலை தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்ததுடன், அப்போது தலவாக்கலை வட்டகொட தோட்டத்தில் வசித்து வந்தார்.
சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான ஜாஸ்மின் ரஞ்சனி (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு எம்பிலிப்பிட்டிய துங்கம பிரதேசத்தில் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் குழு 74 வயதான சந்தேகநபரை எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இன்று (23) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.
2009ஆம் ஆண்டு நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
8 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
15 Nov 2025