Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 டிசெம்பர் 22 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களில் ஒருவர், சபையில் சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளார்.
2018.03.10. திகதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மூலம் போட்டியிட்ட ப்ரௌன்ஸ்வீக் வட்டார உறுப்பினர் சிவம் சுப்ரமணியமே, இன்று (22) முதல் சுயாதீனமாக இயங்க முடிவு செய்துள்ளார்.
தனது முடிவு தொடர்பில் அவர் கருத்துரைக்கையில், கடந்த சில ஆண்டுகளாக நான் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மஸ்கெலியா பிரதேச அமைப்பாளராக நியமனம் பெற்ற நிலையில் ப்ரௌன்ஸ்வீக் வட்டாரத்தில் போட்டி இட்டு மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டேன்.
முதல் மஸ்கெலியா பிரதேச சபையின் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மூலம் உறுப்பினராக 2018 ஆம் ஆண்டு பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்தேன். தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் ஆகையால், இன்று முதல் சுயாதீனமாக இயங்க நான் முடிவு செய்தேன்.
நான் அங்கம் வகித்த தொழிலாளர் தேசிய சங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்க முடிவு செய்து, கட்சியின் உயர் பீடங்களுக்கும் எனது முடிவை எழுத்து மூலம் அறிவித்து உள்ளேன் என்றார்.
இனி வரும் காலங்களில் நான் எனது வட்டார மக்களுக்கு சுயாதீனமாக இயங்கி சேவைகளை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மூலம் போட்டி இட்ட மூன்று பேரில் ஏற்கனவே சாமிமலை ஸ்டொக்கம் வட்டார உறுப்பினர் சுயாதீனமாக இயங்கி வருகின்றார்
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago