2025 ஜூலை 09, புதன்கிழமை

மயங்கி விழுந்த சிறுவன் மரணம்

சுஜிதா   / 2017 ஒக்டோபர் 19 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய மட்டுக்கலை தோட்டத்தில், ஒன்பது வயது சிறுவனொருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளளாரென தெரியவருகிறது.

முத்துக்குமார் சஜீவன் என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன், தீபாவளியையொட்டி புதன்கிழமை மாலை மட்டுக்கலை பகுதியில் பட்டாசுகள் வெடிக்கும் இடத்தில் நின்றுக்கொண்டிருந்த போதே, திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.

சிறுவனை லிந்துலை வைத்தியசாலைக்குக் கொண்டுச் சென்றபோதிலும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாரென, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில், சிறுவனின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .