Niroshini / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித்ராஜபஷ , மு.இராமசந்திரன்
கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிளக்வோட்டர் தோட்டப் பகுதியில் 30 அடி பள்ளத்தில் இருந்து இன்று புதன்கிழமை காலை, குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
பிளக்வோட்டர் தோட்டத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையான பாலகிருஸ்னன் கனகராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கெனில்வத்தையிலிருந்து பிக்வோட்டர் தோட்டத்துக்கு செல்லும் வழியில் இன்று காலை, 30 அடி பள்ளத்தில் காயமுற்ற நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் கிடப்பதை கண்ட தோட்ட தொழிலாளர்கள், அவரை மீட்டு கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி நபர் , ஏற்கெனவே மரணித்துவிட்டதாகவும் அவர் மது அருந்தியிருந்தியிருந்ததாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்கிழமை தனது வீட்டிலிருந்து மரண வீடு ஒன்றுக்கு சென்றவர் திரும்பி வராத நிலையிலேயே பிரதேச மக்களால் காயமுற்ற நிலையில் 30 பள்ளத்திலிருந்து மீட்கப்பட்டார்.
குறித்த நபர், மரண வீட்டுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் வழியிலேயே மதுபோதையில் போதையில் தவறி விழுந்து மரணமாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

21 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
51 minute ago
1 hours ago