Kogilavani / 2017 மே 07 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில், நிர்மாணிக்கப்பட்ட ஐந்து மலசலகூடங்களை கையளிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 5 இலட்சம் ரூபாய் நிதீயொதுக்கீட்டில், மலசலகூடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
150 ஆவது தேயிலை தினத்தையொட்டி, தலவாக்கலை சென் கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஹெலிகொப்டரில் வந்துகொண்டிருந்தார். கொட்டகலை பகுதியில் அன்று நிலவிய, காலநிலை சீர்கேட்டினால், ஹெலிகொப்டர், கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் தரையிறக்கப்பட்டது.
ஜனாதிபதியின் வருகையை அறிந்து பிரதேச மக்கள் மற்றும் மாணவர்கள் சீ.எல்.எப் வளாகத்தில் ஒன்றுகூடினர். இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களின் குறைகளை கேட்டறிந்துகொண்டார்.
இதன்போதே, கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நிலவிவரும் மலசகூட பிரச்சினையை, மாணவர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுச்சென்றனர். இக்குறைபாடுகளை உடனடியாக நிவர்த்திப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது உறுதியளித்தார்.
அவர், வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக, சுமார் 5 இலட்சம் ரூபாய் நிதிஒதுக்கீட்டின் கீழ் மலசலகூடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட மலசலகூடங்கள் பாடசாலையின் அதிபரிடம் கையளிக்கப்பட்டன.


34 minute ago
54 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
54 minute ago
8 hours ago