Janu / 2024 ஜனவரி 23 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரோட்டறி கழகத்தின் அனுசரணையுடன் 109 மலசலக் கூடங்கள் மற்றும் 4 குளியல் அறைகள் அமைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு டிருப் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு ரோட்டறி கழகம் சர்வதேச ரோட்டறி கழகமான ஆஸ்திரேலியா ஜெட்வுட் ரோஸ்வெலி மற்றும் டிக்கோயா ரேர்ட்டறி கழகம் ஆகியன இணைந்து 109 மலசலக் கூடங்கள் மற்றும் 04 குளியல் அறைகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு தலவாக்கலை டிருப் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை (19)இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அவுஸ்திரேலியா ரோட்டறி கழக உறுப்பினர் பீட்டர், முன்னாள் மாவட்ட ஆளுநர் அஜித் , நீர்கொழும்பு ரோட்டறி கழக உறுப்பினர்கள். டீக்கோயா ரோட்டறி கழக உறுப்பினர்கள் பயனாளிகள் என அனைவரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இதற்கு செலவு செய்யப்பட்டுள்ள மொத்த தொகையானது இரண்டு கோடி ரூபாவாகும். இதற்கான நிதியை நீர்கொழும்பு ரோட்டறி கழகம் சர்வதேச ரோட்டறி கழகமான அவுஸ்திரேலியா ஜெட்வுட் ரோஸ்வெலி மற்றும் டிக்கோயா ரோட்டறி கழகம் கெட்ஜே நிதியம் ஆகியன வழங்கியிருந்தன.
இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், பெருந்தோட்ட பகுதிகளில் சேவையாற்றுகின்ற குடும்ப நல உத்தியோகஸ்தர்களுக்கான 5 நாள் வதிவிட பயிற்சி நெறியும் ஹட்டனில் நடைபெற்றது.இதன்படி முதல் 5 நாட்களுக்குச் சிங்கள மொழி மூலமும் அடுத்த 5 நாட்கள் தமிழ் மொழி மூலமாகவும் பயிற்சிகள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டி.ஷங்கீதன்

1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago