2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

மலையகத்தில் கடும் மழை

Janu   / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை (02) மாலை வேளையில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது. இந்த திடீர் மழை காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

கடும் மழை காரணமாக சில இடங்களில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், தாழ்நில பகுதிகளில் வெள்ளநீரும் தேங்கியுள்ளது.

குறிப்பாக புசல்லாவை, கண்டி, பேராதனை, மாத்தளை, மடவளை, வத்தேகம, உக்குவலை, பன்விலை, கபரகலை, நெல்லிமலை மற்றும் கோமரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறும், குறிப்பாக மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்போர் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

மெய்யன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .