Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 19 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
விளையாட்டுத் துறைக்கென ஒதுக்கியுள்ள நிதியில், எந்த அபிவிருத்தியையும் செய்ய முடியாதென்றும் இதனால், மலையகத் தோட்டங்களில் மைதானம் ஒன்றை வெட்டக்கூட முடியாதென்றும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத் கமகே, தகுதியான ஒருவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சு கிடைத்துள்ளதால், விளையாட்டுத்துறையை அபிவிருத்திச் செய்வதற்கான நிதியை ஒதுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
நாடாளுமன்றத்தில், நேற்று (18) நடைபெற்ற விளையாட்டுத்துறை, தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கான நிதியொதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்துகாண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அவர், 2015ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய மைதானத்தை, நான்கு வருடங்களாக நல்லாட்சியால் திறக்க முடியாமற்போன நிலையிலேயே, விளையாட்டுத்துறை அமைச்சர், இந்த மைதானத்தை அண்மையில் திறந்து வைத்தாரென்றுச் சுட்டிக்காட்டினார்.
மேலும், தாம் அமைத்த மைதானங்களைப் பராமரிக்கக்கூட இந்த அரசாங்கதால் முடியாமல் போயுள்ளதாகத் தெரிவித்த அவர், கடமைகளைச் செய்யக்கூடிய அமைச்சரான ஹரீனுக்கு, போதிய நிதியை இந்த அரசாங்கம் ஒதுக்காதென்றும் தங்களைப் போன்றவர்களைக் கடமையாற்ற, இந்த அரசாங்கம் இடமளிக்காது என்றும், இதுவே இந்த அரசாங்கத்தின் கொள்கையென்றும் தெரிவித்தார்.
தற்போது, பாடசாலைகளின் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க, எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை என்றும் 0.5 சதவீத ஆரம்பப் பிரிவு மாணவர்களே, விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுகின்றனர் என்றும், மஹிந்தானந்த எம்.பி, மேலும் சுட்டிக்காட்டினார்.
4 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago
5 hours ago