Kogilavani / 2021 ஏப்ரல் 12 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
மலையகத்தைப் பிரதானப்படுத்தி, “அகில இலங்கை தொழிற்சங்க காங்கிரஸ்” என்ற பெயரில், புதியத் தொழிற்சங்கமொன்று, நேற்று முன்தினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
இதன் பொதுச்செயலாளராக அம்மாசி எஸ்.நல்லுசாமியும் தலைவராக நேசன் திருநேசனம், பொருளாளராக கந்தசாமி லோகேஸ்வரி ஆகியோரும் செயற்படுகின்றனர். மேலும் பலர் இதில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்தத் தொழிற்சங்கம், ஹட்டன் சிவ ஸ்ரீ சிவசுப்பிரமணிய தேவஸ்த்தானத்தில் நேற்று முன்தினம்(11) நடைபெற்ற விசேட பூஜைகளுடன் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இதன்போது கருத்துரைத்த மேற்படித் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் அம்மாசி எஸ்.நல்லுசாமி, தொழிற்சசங்கங்கள் என்பது, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுக்காகின்ற ஓர் அமைப்பு என்றும் ஆனால் தற்போது தொழிலாளர்கள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
அதற்கு தொழிற்சங்கங்களைக் குறை கூறவில்லை என்றும் நடைமுறையிலுள்ள சிக்கல்களே இதற்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.
மலையகத்தில் பல தொழிற்சங்கங்கள் இருந்தாலும்கூட அவை அனைத்தும், தொழிலாளர் உரிமை தொடர்பாக அக்கறை கொள்ளாது சுயநலத்துடனேயே செயற்படுவதாகவும் சாடினார்.
தோட்டத் தொழிலாளர்கள் உரிமைகள் தொடர்பாக, எந்த ஒரு தொழிற்சங்கமும் அக்கறைக் கொள்வதாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.


6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago