Kogilavani / 2021 மார்ச் 20 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக மக்கள் முன்னணியின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்த சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன், முன்னணியில் உள்ளார்ந்த பழிவாங்கல்கள், பதவி பேராசைகள் தொடர்வதாகவும் இந்நிலைமை தொடருமாயின் கடைசியில் கட்சியில் எவருமே எஞ்சமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், மலையக மக்கள் முன்னணி என்ற அமைப்பின் தூண்களாகிய மக்கள், சந்திரசேகரன் மக்கள் முன்னணியினுடனேயே இருக்கிறார்கள் என்றும் இனிவரும் காலங்களில் மக்களைப் பற்றி சிந்திக்கும் மக்களுக்காக சேவை செய்யும் அமைப்பாக சந்திரசேகரன் மக்கள் முன்னணியே இயங்கும் என்றும் தெரிவித்தார்.
ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தப்பட்ட எம் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு அரசியல் சமூக மாற்றங்களை எதிர்ப்பார்த்தே, 1990ஆம் ஆண்டுகளில் அமரர் சந்திரசேகரனுடன் இணைந்து மலையக மக்கள் முன்னணியை உருவாக்கினர் என்றும் இன்றைய தலைமையில் இருக்கும் வியாபாரிகளின் வங்கிக்கணக்குகளையும் சொத்துக்களையும் அதிகரித்துக்கொள்வதற்காக அல்ல என்றும் தெரிவித்தார்.
மக்களின் நலனை முன்னிருத்தியே அன்றைய முன்னணி செயற்பட்டதாகவும் ஆனால் மலையக மக்கள் முன்னணியின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மலையகத்துக்காக சேவை செய்ய எண்ணும் அனைத்து இளைஞர்,யுவதிகள், புத்திஜீவிகள் ஆரம்பகால உறுப்பினர்கள் என அனைவருக்கும் இணைந்து செயற்பட சந்திரசேகரன் மக்கள் முன்னணி வாய்ப்பளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026