Janu / 2024 பெப்ரவரி 06 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வை, நுவரெலியா-இராகலை நகரில் மார்ச் மாதம் 17ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கட்சியின் நுவரெலியா கிளை காரியாலயத்தில் மலையக மக்கள் முன்னணியின் மகளிர் பிரிவான மலையக மகளிர் முன்னணியுடன் கலந்துரையாடப்பட்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 200இல் மலையகம் மாற்றத்தைநோக்கி எனும் நிகழ்வை போலவே பிரம்மாண்டமாகவும் வித்தியாசமான முறையிலும் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது மலையகத்தை சார்ந்த சாதனை பெண்கள் கௌரவிக்கப்படவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்

7 minute ago
11 minute ago
20 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
20 minute ago
26 minute ago